ஆன்மிகம்
பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் சன்னதி தெருவை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் விசாக திருவிழா ரத்து

Published On 2020-05-28 05:59 GMT   |   Update On 2020-05-28 05:59 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாகதிருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

எனவே வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதே சமயம் கோவிலில் தினமும் வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News