ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை தை அமாவாசை விழா

Published On 2020-01-23 03:18 GMT   |   Update On 2020-01-23 03:18 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள்.

அதன்பிறகு ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

நாளை அதிகாலை 3.30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, நிவேத்திய பூஜை, ஸ்ரீபலி பூஜை, உச்சி கால பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. அதன்பிறகு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்ககவசம் மற்றும் தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 4.30 மணிக்கு கோவிலின் வடக்கு நுழைவு வாசல் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. அதன் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சுசீந்திரம் ஆஸ்ராமம் காசிதிருப்பனந்தாள் காசி திருமடம் சார்பில் அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேள-தாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு கடலில் ஆறாட்டு நடைபெறுகிறது.

பின்னர் வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள-தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் தங்கம், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News