ஆன்மிகம்
கோணலூர் கிராமத்தில் ஆற்றுத் திருவிழா

கோணலூர் கிராமத்தில் ஆற்றுத் திருவிழா

Published On 2020-01-20 04:59 GMT   |   Update On 2020-01-20 04:59 GMT
கோணலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அவரின் தங்கையான காட்டுமலையனூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக ஆற்றிற்கு வந்தனர்.
வேட்டவலம் அருகே கோணலூர் கிராமத்தில் செல்லும் துரிஞ்சலாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். அதன்பின்னர் பல ஊர்களின் வழியே சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். இந்த ஆற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் ஆற்றுத் திருவிழா நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.

விழாவில் கோணலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அவரின் தங்கையான காட்டுமலையனூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக ஆற்றிற்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை செய்து அதன்பின்னர் உற்சவர்கள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோணலூர், காட்டுமலையனூர் கிராமங்களைச் சேர்ந்த கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேட்டவலம் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News