ஆன்மிகம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வெற்றிலைகளால் அலங்காரம்

விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வெற்றிலைகளால் அலங்காரம்

Published On 2019-11-27 04:45 GMT   |   Update On 2019-11-27 04:45 GMT
11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜர் நகரில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை அமாவாசை நாளான நேற்று அதிகாலை 5 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு டெல்டா மாவட்டங்களை இயற்கை பேரிடரிலிருந்து காப்பாற்றி விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News