ஆன்மிகம்
முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

Published On 2019-11-13 04:01 GMT   |   Update On 2019-11-13 04:01 GMT
புளியங்குடி முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
புளியங்குடி முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் நேற்று பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணியளவில் கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.

மாலை 6.30 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 1,008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும், சிறப்பு வருணபூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, இரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. முப்பெரும்தேவியருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News