ஆன்மிகம்
சனீஸ்வர பகவானின் பாதத்தில் வந்து நின்ற காகம்

சனீஸ்வர பகவானின் பாதத்தில் வந்து நின்ற காகம்

Published On 2019-10-21 05:34 GMT   |   Update On 2019-10-21 05:34 GMT
காகம் ஒன்று கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் புகுந்து சனீஸ்வர பகவான் சிலையின் பாதத்தில் நின்று கொண்டது. இதைபார்த்த அந்த பகுதி மக்களும், கோவிலில் இருந்த பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் சாமனஹள்ளி கிராமத்தில் சனீஸ்வர பகவான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகம் ஒன்று திடீரென கோவிலுக்குள் நுழைந்தது. பின்னர் அது மூலவர் சன்னதிக்குள் புகுந்து சனீஸ்வர பகவான் சிலையின் பாதத்தில் நின்று கொண்டது.

இதைபார்த்த அந்த பகுதி மக்களும், கோவிலில் இருந்த பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் திரண்டு வந்து சனீஸ்வர பகவானுக்கும், காகத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது அந்த காகம் சனீஸ்வர பகவானின் பாதத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தது.

பின்னர் சனீஸ்வர பகவானுக்கும், காகத்திற்கும் ஆரத்தி காட்டப்பட்டு வழிபாடு நடந்தது. காலை முதல் மாலை வரையில் சன்னதிக்குள்ளேயே இருந்த அந்த காகம், மாலையில் பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னர் கோவிலில் இருந்து பறந்து சென்றது.

Tags:    

Similar News