ஆன்மிகம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருஷாபிஷேக விழா

Published On 2019-06-27 04:06 GMT   |   Update On 2019-06-27 04:06 GMT
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெற்றது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெற்றது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, 10.30 மணிக்கு கோவிலின் மேல் பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சன்னதி விமானம், ஆறுமுக நாயனார் சன்னதி, ஜம்புலிங்கேஸ்வரர் சன்னதி ஆகிய விமானங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர், ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

பூஜைகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர், சுப்பிரமணிய பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ், திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News