ஆன்மிகம்

வயலூர் முருகன் கோவில் தெப்ப உற்சவம்

Published On 2019-05-20 03:18 GMT   |   Update On 2019-05-20 03:18 GMT
வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர்.
வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11-ம் நாளான நேற்று மாலை மூலவர் சுப்பிரமணியருக்கு 109 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் தெப்ப குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பின்னர் பெரிய பேரல்களை கொண்டு மிதவை ரத மேடை அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று, மிதவை ரத மேடையில் எழுந்தருளினார்கள்.

பின்னர் தெப்பக் குளத்தை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆலோசனையின்படி உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News