ஆன்மிகம்

நிலக்கோட்டையில் கோவில் திருவிழா: சிம்ம வாகனத்தில் மாரியம்மன் நகர்வலம்

Published On 2019-03-18 05:09 GMT   |   Update On 2019-03-18 05:09 GMT
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கையுடன் நகர்வலம் நடந்தது.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கையுடன் நகர்வலம் நடந்தது. இந்த நகர்வலம் நிலக்கோட்டை மெயின் பஜார், நாலு ரோடு, சவுராஷ்டிரா நடுநிலைப்பள்ளி, பெரிய காளியம்மன் கோவில் வழியாக வந்து கோவிலை அடைந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை முதல் நிலக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் அக்னிச்சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். நாளை காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வருதல், அலகு குத்தி வருதலும் இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதலும் நடக்கிறது.

20-ந்தேதி இரவு அம்மன் விடிய விடிய பூப்பல்லக்கில் நகர்வலம் வந்து பொதுமக்களுக்கு தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன், ஜெயபாண்டியன் மற்றும் விழாக் குழுவினர் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News