ஆன்மிகம்
பண்ருட்டியில் திருக்கோவிலூர் தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருக்கோவிலூர் தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

Published On 2019-02-25 05:33 GMT   |   Update On 2019-02-25 05:33 GMT
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கோவிலூர் தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்தியாக உள்ள தேகளச பெருமாளுக்கு ஆண்டு தோறும் மாசிமகத்தன்று கடலூர் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும். அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற தீர்த்தவாரிக்கு கடந்த 14-ந்தேதி தேகளச பெருமாள் திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்டார். 19-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர், தேகளசபெருமாள், பண்ருட்டி மேலப்பாளையம், இந்திரா காந்தி சாலை, பஸ் நிலையம், காந்திரோடு வழியாக நேற்று முன்தினம் மாலை வரதராஜபெருமாள் கோவிலை வந்தடைந்தார்.

இதையடுத்து தேகளச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சீரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளச பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News