ஆன்மிகம்

பழனியிலும் கிரிவலம்

Published On 2019-01-18 06:39 GMT   |   Update On 2019-01-18 06:39 GMT
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. பழனிமலை சுமார் 2 1/2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பெரும்பாலானவர்கள் கிரிவலம் செய்த பிறகே மலைக்கு சென்று தண்டாயுதபாணியை வணங்குகின்றனர்.

அக்னி நட்சத்திரத்தின் போது சித்திரை மாத இறுதியிலும், வைகாசி மாத தொடக்கத்திலும் 14 நாட்கள் மக்கள் இரவு, பகலாக பழனி மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இந்த 14 நாட்களும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடம்ப மலர்கள் தலையில் சூடி கிரிவலம் செல்வார்கள்.

14-வது தினத்தன்று உற்சவர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி கிரிவலம் செல்வார். இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும்.

Tags:    

Similar News