ஆன்மிகம்

தெய்வங்களை வணங்கும் விதி

Published On 2018-11-16 10:15 GMT   |   Update On 2018-11-16 10:15 GMT
தெய்வங்களையும், குருவையும் வணங்கும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிரம்மா, விஷ்னு, சிவன் இம்மூவரை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது, நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும், தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞ்சாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள், மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது!
Tags:    

Similar News