ஆன்மிகம்

ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்

Published On 2018-10-31 09:31 GMT   |   Update On 2018-10-31 09:31 GMT
1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார்.
1200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆதிசங்கரர் சிருங்கேரியில் அம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார். பிறகு பனிரெண்டாவது குருவான ஸ்ரீ வித்யாரண்ய மகாசுவாமிகள் கேரள ஆலயங்களைப் போன்று ஓடுகளால் வேயப்பட்ட மேல் தளத்தை உடைய மூங்கில்களாலான ஆலயத்தை நிர்மாணித்து, பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அபிஷேகம் முதலியவைகளால் ஆராதிக்கப்பட்டு வந்ததால் சிதிலமாகத் தொடங்கியிருந்த சந்தன விக்ரகத்திற்கு பதிலாக தற்போதுள்ள தங்கத்தாலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

33-ம் குருவான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதீ மகாசுவாமிகள், மெருகூட்டப்பட்ட கருங்கற்களாலான மதிற்சுவர் களைக் கொண்ட, தற்போது காணப்படும் ஆலயத்தை உருவாக்கினார். 35-ம் குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள் ஆலயத்திற்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்தார்.

தற்போதைய குருவான ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு தங்கத்தாலான நிலைப் படியையும், கதவுகளையும் உருவாக்கியதுடன் அம்பாளுக்கென்று தங்கத்தேர் ஒன்றையும் அர்ப்பணித்திருக்கிறார். ஆலயத்தினுள் இருக்கும் நவரங்க மகாமண்டபம் மிகத் தேர்ச்சியான சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய பற்பல தூண்களைக் கொண்டது. இத்தூண்களில் துர்கா, ராஜராஜேஸ்வரி முதலான கடவுள்களின் பிம்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சர்வ அலங்காரங்களுடன் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ சாரதாம்பாளைக் காண கண்கோடி வேண்டும்.
Tags:    

Similar News