ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் உறியடித் திருவிழா - 77 ஆயிரம் பேர் சாமி தரிசனம்

Published On 2018-09-05 09:02 GMT   |   Update On 2018-09-05 09:02 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி உறியடித் திருவிழா நடைபெற்றது. உறியடித் திருவிழா முடிந்ததும், உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே ஹத்திராம் பாவாஜி மடத்தின் சார்பிலும், மைசூரு சத்திரம் அருகில் மைசூரு மடத்தின் சார்பிலும், அன்னமாச்சாரியார் மற்றும் வெங்கமாம்பா வம்சதாரர்களின் சார்பில் வடக்கு மாடவீதியிலும், வராஹசாமி கோவில் அருகிலும் உறியடித் திருவிழா நடந்தது.

முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்கள் மலையப்பசாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப் பூஜைகள், ஆஸ்தானம், நைவேத்தியம் ஆகியவை செய்யப்பட்டது. பின்னர் உறியடித் திருவிழா நடக்கயிருந்த 4 இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

உறியடித் திருவிழா முடிந்ததும், உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். கோவில் வாசலில் உற்சவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருமலையில் நடந்த உறியடித் திருவிழாவால் கோவிலில் நேற்று கல்யாண உற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்துச் செய்யப்பட்டன.

ஏழுமலையானை திங்கட்கிழமை 77,739 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 32,058 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று காலை 10 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 25 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 20 மணிநேரமும், நேர ஒதுக்கீடு முறை பக்தர்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்யதரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். மொத்தம் 77 ஆயிரத்து 739 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 578 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் 3 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம்.
Tags:    

Similar News