ஆன்மிகம்

முருகப்பெருமானின் தத்துவம்

Published On 2018-05-25 07:57 GMT   |   Update On 2018-05-25 07:57 GMT
ஆன்மாவை, ஞான ஆசிரியரான இறைவன் ஆட்கொள்வதைக் குறிப்பதாகும். இதுவே முருகப்பெருமான் தத்துவம் ஆகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நம் உடலானது வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்று மலங்களை வெளியேற்றுகிறது. இது போல நம் உணர்வும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களை வெளிப்படுத்துகிறது என்று சமய நெறிகள் சொல்கின்றன. இதைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் காமம், வெகுளி, மயக்கம் என மூன்றாகச் சொல்கின்றனர்.

சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசுரன் எனும் மூவரும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள். அந்த அசுரர்களால் சிறையிடப்பட்ட தேவர்கள், பசு (ஆன்மா) வர்க்கங்கள். அசுரர்கள் மூவரையும் அழித்து தேவர்களை முருகப்பெருமான் ஆட்கொண்ட விதமானது, மும்மலங்களை சிறைபட்டிருந்த ஆன்மாவை, ஞான ஆசிரியரான இறைவன் ஆட்கொள்வதைக் குறிப்பதாகும். இதுவே முருகப்பெருமான் தத்துவம். 
Tags:    

Similar News