ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2018-03-01 05:24 GMT   |   Update On 2018-03-01 05:24 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருஷாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருஷாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, 9 மணிக்கு கலசபூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், குங்குமம், களபம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு சோடஷா அபிஷேகம் போன்றவை நடக்கிறது.

பகல் 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு பலவண்ண மலர்களால் புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, போன்றவை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News