ஆன்மிகம்

மாசித் திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2018-02-28 04:24 GMT   |   Update On 2018-02-28 04:24 GMT
பிரசித்தி பெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழாவை முன்னிட்டு விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடந்தது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடக்கும். இதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி-அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் கடந்த 25-ந்தேதி சைவ, சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

இம்மையிலும் நன்மை தருவார் சுவாமியிடம் இருந்துபெறப்பட்ட மங்கலநாணை சிவாச்சாரியார்கள் மத்தியபுரி அம்மனுக்கு அணிவித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

விழாவில் இன்று(புதன் கிழமை) தேரோட்டம் நடக்கிறது.2-ந்தேதி பைரவர் பூஜையுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News