ஆன்மிகம்
முதல் நாள் தெப்பத்தில் பார்த்தசாரதி சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருவல்லிக்கேணியில் தெப்பத் திருவிழா - இன்றும் நாளையும் பார்த்தசாரதி சுவாமி வலம் வருகிறார்

Published On 2018-02-16 09:55 GMT   |   Update On 2018-02-16 09:54 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இன்றும் நாளையும் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் தெப்பம் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு உற்சவர் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல் இன்றும் நாளையும் மாலை 6.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். 18-ம் தேதி நரசிம்மர், 19-ம் தேதி ரங்கநாதர், 20-ம் தேதி ராமர், 21-ம் தேதி கஜேந்திரவரதராஜ சுவாமிகள் மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

தெப்ப திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Tags:    

Similar News