ஆன்மிகம்
ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தையும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை காண வந்தவர்களையும் படத்தில் காணலாம்.

மகா சிவராத்திரி விழா: 12 இடங்களில் ஜோதிர்லிங்க தரிசனம்

Published On 2018-02-14 03:58 GMT   |   Update On 2018-02-14 03:58 GMT
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் மகா சிவராத்திரியையொட்டி மதுரையில் 12 இடங்களில் ஜோதிர்லிங்க தரிசனம் நடந்தது.
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் மகாசிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நேற்று 12 இடங்களில் பக்தர்கள் ஜோதிர்லிங்க தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி மதுரையில் சோமநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் ஜவகர்ரோடு பெரிய சொக்கிகுளத்திலும், ஒம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தரிசனம் கல்யாணி ஸ்கொயர் சிம்மக்கலிலும், மல்லிகார்ஜூனர் ஜோதிர்லிங்க தரிசனம் சர்வேஸ்வரர் கோவில் தெரு அண்ணாநகரிலும், காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் இந்திராநகர் ஆனந்த் நகர் விரிவாக்கம் ஆனையூரிலும் நடந்தது.

சோமநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் முனிச்சாலையில் உள்ள வத்சலா தேசிகன் மகாலில் நடைபெற்றது. விபூதிலிங்கம், மரகதலிங்கம் ஜோதிர்லிங்க தரிசனம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள பிரம்மா குமாரிகள் தியான நிலையத்திலும், நாகேஸ்வர் ஜோதிர்லிங்க தரிசனம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவிலும், வைத்தியநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் திருமங்கலம் என்.எஸ்.வி. விஜய் மகால் உள்பட 12 இடங்களிலும் ஜோதிர் லிங்க தரிசனம் நடந்தது.

இந்த தரிசனம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடந்தது. இன்னும் 3 நாட்கள் இந்த தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் ஜோதிர்லிங்க தரிசனத்தின் தொடர்ச்சியாக பிரம்மா குமாரிகள் கிளை நிலையங்களில் இலவச ராஜயோக தியான வகுப்பும் நடைபெறுகிறது. ஜோதிர்லிங்க தரிசனம் வைக்கப்பட்டு இருந்த பகுதியில் ஆன்மிக கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News