ஆன்மிகம்

தூணில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்

Published On 2018-01-06 05:34 GMT   |   Update On 2018-01-06 05:34 GMT
பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோவில்களில் தூணிலும் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது வழக்கமாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மராட்டியம் வரை ஆஞ்சநேயருக்குதனி கோவில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோவில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம். சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என்று சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம்.

இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
பாரதப் புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியில் இருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப் பிடித்தவர். எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப் பெரிய உருவம் உடைய கோவில்கள் அதிகம் உள்ளது.

Tags:    

Similar News