ஆன்மிகம்

ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரர்

Published On 2017-12-18 04:23 GMT   |   Update On 2017-12-18 04:23 GMT
சிவபெருமான் சனிபகவானுக்கு மகேஸ்வர பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை அளித்த கதையை விரிவாக பார்க்கலாம்.
தனக்கு நேர்ந்த அவமானமும், அவப்பெயரும் நீங்க தாயின் ஆலோசனைப்படி சனிபகவான் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து கடுமையான தவம் செய்தார்.

சனியின் தவத்தை கண்டு மனமகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து, உன் அரிய தவத்தால் மகிழ்ந்தேன். இன்று முதல் என்னுடைய மகேஸ்வர பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை உனக்கு தருகிறேன். இனி நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய்.

நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்கே உரியது. நீ பூஜை செய்த லிங்கம் சனீஸ்வர லிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்றே அழைக்கப்படும் எனக்கூறி அருளாசி புரிந்தார்.

அன்று முதல் சனிபகவான் சனீஸ்வரராக இருந்து நம்மை ஆட்டுவிக்கிறார்.
Tags:    

Similar News