ஆன்மிகம்

சாப்பிடும் முன்பு வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்?

Published On 2017-11-10 08:13 GMT   |   Update On 2017-11-10 08:13 GMT
சாப்பிடும் முன்பு வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளித்து விட்டு, பின் உணவு பரிமாறும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சாப்பிடும் முன்பு வாழை இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.

சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு, பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம்.

மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.
Tags:    

Similar News