ஆன்மிகம்

கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் ஆறாட்டுவிழா

Published On 2017-10-31 04:55 GMT   |   Update On 2017-10-31 04:55 GMT
கன்னியாகுமரி தேரிவிளைகுண்டலில் முருகன் கோவில் சுவாமிக்கு ஆறாட்டுவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி தேரிவிளைகுண்டலில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 10-ம் திருவிழாவான சுவாமிக்கு ஆறாட்டுவிழா நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு சுவாமி குதிரைவாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம், மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக பகவதி அம்மாள்புரத்தை சென்றடைந்தது. அங்கு உற்சவமூர்த்திக்கு பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு என்.பி. கால்வாயில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைவாகனத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் குமரி மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் வளையாபதி ஸ்ரீ சுயம்பு, பரமார்த்தலிங்கபுரம் ஊர் முன்னாள் தலைவர் ஸ்ரீ சுயம்பு, தேரிவிளை குண்டல் முருகன் கோவில் நிர்வாக குழு தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் அனந்தகிருஷ்ணன், செயலாளர் அருள்கார்த்திக், பொருளாளர் வேல்நாடார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News