ஆன்மிகம்

ஆயுள் கூட்டும் தீபாவளி தீபம்

Published On 2017-10-14 06:47 GMT   |   Update On 2017-10-14 06:47 GMT
தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.
* கல்வியின் அதிபதியை வணங்க சரஸ்வதி பூஜை உகந்ததாக இருப்பதுபோல, செல்வத்தின் அதிபதியை வணங்க உகந்தது தீபாவளி எனும் லட்சுமி பூஜை என்பது ஐதீகம்.

* தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.

* பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, மகாவிஷ்ணு வுக்கு மாலை அணிவித்து மார்பில் இடம் பிடித்த நாள் தீபாவளி ஆகும்.

* தீபாவளியன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைப்பதன் மூலம், செல்வ வளம் மற்றும் ஆயுள் விருத்தி ஆகிய நன்மைகள் ஏற்படுவதாகவும் ஐதீகம்.

* அகல் விளக்குகளில், சரஸ்வதிக்காக 3 தீபங்கள், மகாலட்சுமிக்காக 3 தீபங்கள் மற்றும் அவரவரது குல தெய்வத்துக்காக 3 தீபங்கள் என்று மொத்தம் 9 தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது முறை.

* கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

* மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனி கிரக பாதிப்பு போன்றவை நீங்கும்.

* வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்களமும் பெருகும்.
Tags:    

Similar News