ஆன்மிகம்

சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் இன்று நடக்கிறது

Published On 2017-10-05 05:13 GMT   |   Update On 2017-10-05 05:13 GMT
பண்ருட்டி திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரம்மோற்சவம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பண்ருட்டி திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை, 6 மணிக்கு தோமாலை சேவை, 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், 12 மணிக்கு கருட வாகனத்தில் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்று, விழா கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி மூலவர் சரநாராயண பெருமாள் திருமலை திருப்பதி மலையப்ப சாமி அலங்காரத்தில் நெய்தீப ஒளி அலங்காரத்திலும், மூலவர் ஹேமாம் புஜவல்லி தாயார் வெள்ளங்கி அலங்காரத்திலும் காட்சி அளிக்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News