ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: பெரியசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் பவனி

Published On 2017-09-23 08:31 GMT   |   Update On 2017-09-23 08:31 GMT
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரியசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. மாலை 5.48 மணியில் இருந்து 6 மணி வரை மீன லக்னத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள்.பிரம்மோற்சவ விழா தொடங்கியதை யொட்டி, கடந்த செவ்வாய்க் கிழமை கோவில் பிரகாரத்தை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன் நேற்று ஏழுமலையான் சேனாதிபதி படை பரி வாரங்கள், அர்ச்சகர்களுடன் அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்றார். அங்கிருந்து புற்று மண்ணை கொண்டு வந்து பூதேவியின் உருவத்தை வரைந்து, அவர் வயிற்று பகுதியில் இருந்து மண் எடுத்து 9 விதமான தானியங்கள் முளையிடப்பட்டது.



இதன் மூலம் பஞ்சபூதங்களை பிரம்மோற்சவ விழாவிற்கு வரவழைப்பதாக ஐதீகம். இதனை மிருத்சங்கரணம் அல்லது அங்குரார்ப்பணம் என அழைக்கின்றனர். பின்னர், விஷ்வக்சேனர், அனந்தன், சுதர்சனர், கருடாழ்வார் உள்ளிட்டவர்களுக்கும் பூஜை நடைபெற்றது.

திருப்பதி முழுவதும் ஏழுமலையானின் அவதாரங்களை சித்திரிக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள், மலர் கண்காட்சி, அரிய புகைபடக் கண்காட்சி, ஆயுர்வேத மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News