ஆன்மிகம்

பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தவசு திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-08-19 03:04 GMT   |   Update On 2017-08-19 03:04 GMT
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லுாரில் பிரசித்தி பெற்ற பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தவசு திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லுாரில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர் சமேத ஒப்பனையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆவணி தவசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தவசு 13-ம் திருநாளான செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது.

அன்று மாலை 6 மணிக்கு முகலிங்கநாதராகவும், இரவு 12 மணிக்கு பால்வண்ணநாதராகவும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News