ஆன்மிகம்

தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2017-08-12 04:39 GMT   |   Update On 2017-08-12 04:39 GMT
தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலில் மலர் முழுக்கு விழாவையொட்டி விநாயகர் கோவிலில் இருந்து யானைமுன் செல்ல, மேள-தாளத்துடன் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
தோவாளை சுப்பிரமணியசாமி கோவிலில் மலர் முழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு காக்கும் விநாயகர் கோவிலில் இருந்து யானைமுன் செல்ல, மேள-தாளத்துடன் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பறக்கும் காவடியும் ஊர்வலத்தில் வந்தது.

நிகழ்ச்சியை காமரின் ஆங்கிலபள்ளி தலைவர் என்ஜினீயர் லட்சுமணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சுப்பிரமணியசாமி கோவிலை சென்றடைந்தது.

இதில் திருமலை முருகன் பக்தர்கள் சங்க தலைவர் பகவதிபெருமாள், செயலாளர் லட்சுமண பெருமாள், பொருளாளர் சுடலையாண்டி பிள்ளை, துணை செயலாளர் பாலசந்திரன், தோவாளை கே.சி.யூ.மணி மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் முடிந்த பின்பு, சாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. மாலையில் வழக்காடு மன்றமும், தொடர்ந்து மெல்லிசை நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News