ஆன்மிகம்

விஷ்ணு சிலையின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள மோகினி வடிவம்

Published On 2017-07-25 08:01 GMT   |   Update On 2017-07-25 08:01 GMT
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள விஷ்ணு கோவிலில் உள்ள 5 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையின் பின்புறம் மோகினி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள விஷ்ணு கோவில் புகழ்பெற்றது. இங்கு கம்பீரமான தோற்றம் கொண்ட விஷ்ணு சிலை உள்ளது. 5 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையின் பின்புறம் மோகினி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் மோகினியின் பின்புறம் மட்டுமே வடிக்கப்பட்டுள்ளது. அதில் கூந்தல், அணிகலன்கள், சிற்றிடை நளினம் போன்றவை அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

இதே போல் கோகர்ணத்தில் உள்ள சிவன் கோவிலில், சிவன் சிலையின் பின்புறம் பூதத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதை ‘பூத ராஜா சன்னிதி’ என்று அழைக்கிறார்கள்.
Tags:    

Similar News