ஆன்மிகம்

சகல பாக்கியங்களையும் வழங்கும் சர்ப்ப கிரக பெயர்ச்சி

Published On 2017-07-22 07:47 GMT   |   Update On 2017-07-22 07:47 GMT
ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை பகல் மணி 12.42-க்கு ஆயில்யம் 4-ம் பாதத்தில் கடக ராசியில் ராகுவும், அவிட்டம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.
சுபஸ்ரீ ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை பகல் மணி 12.42-க்கு ஆயில்யம் 4-ம் பாதத்தில் கடக ராசியில் ராகுவும், அவிட்டம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கிச் செல்லும். ஆனால் ‘சாயா கிரகங்கள்’ (நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படும் ராகுவும்-கேதுவும் மட்டும் பின்னோக்கியே செல்கின்றன. ‘சுய பலமற்ற கிரகங்கள்’ என்று வர்ணிக்கப்படும் இந்த கிரகங்கள் தான் மிகுந்த பலம்பெற்ற கிரகங்களாக விளங்குகின்றன.

எனவே தான் ‘ராகுவைப் போல கொடுப்பானுமில்லை, கேதுவைப்போல கெடுப்பானுமில்லை’ என்று சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் ராகுவை ‘கொடை வள்ளல்’ என்றும், கேதுவை ‘கெடுப்பவன்’ என்றும் நாம் கருதக் கூடாது. ராகு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பார். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் ஞானம் விருத்திக்கும். நல்ல அறிவாற்றல் சித்திக்கும். கீர்த்தி மேலோங்கும். எனவே ‘கேதுவைப் போல கிடைப்பானுமில்லை’ என்றே நாம் சொல்லலாம்.

பின்னோக்கிச் செல்லும் இந்த கிரகங்கள் தான் நம் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வழிவகுகின்றன. அப்படிப்பட்ட ராகு பகவான் இப்பொழுது ஆயில்யம் 4-ம் பாதத்சகல பாக்கியங்களையும் ...

தில் கடக ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். அதே நேரத்தில் அவிட்டம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் ே-து சஞ்சரிக்கப் போகின்றார். சகல யோகங்களையும் தருவது சர்ப்ப கிரகங்கள் தான் என்றும், பணவரவைப் பெருக்குவது பாம்பு கிரகங்கள் தான் என்றும் அனுபவத்தில் உணர முடியும்.

நமது ஜாதகத்தில் யோகம் தரும் விதத்தில் ராகு-கேதுக்கள் சஞ்சரித்தால் பண மழையிலும், பாராட்டு மழையிலும் நனையலாம். தொழில் அதிபராகவும் திகழலாம், அரசியலிலும் பிரகாசிக்கலாம்.

அல்லாமல் சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். குறிப்பாக திருமணத்தில் தடை, புத்திரப்பேறில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படலாம்.

அப்படிப்பட்டவர்கள் ராகு-கேதுக்களின் பாதசார பலமறிந்து நாள், யோகம், திதி, கரணம், நட்சத்திரம் பார்த்து யோகபலம் பெற்ற நாளில் வரம் தரும் தெய்வ சன்னிதியைத் தேர்ந்தெடுத்து வழிபட வேண்டும். அனுகூலமான ஆலயங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதால் தடைக்கற்கள் கூட படிக்கற்களாக மாறும். தன்னிகரில்லாத வாழ்க்கையும் அமையும்.

இந்த முறை ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு 2.9.2017அன்று குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் குருவின் பார்வை மேஷம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளில் பதிவாகின்றது. விருச்சிக ராசிக்கு சுக ஸ்தானத்திலும், ரிஷப ராசிக்கு தன ஸ்தானத்திலும் பதிவாகின்றது. அதன்பிறகு 19.12.2017-ல் சனிப்பெயர்ச்சியும் நிகழவிருக்கின்றது.

இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது தனுசு ராசிக்கு செல்லப் போகின்றார். மேற்கண்ட குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவற்றால் வரும் பலன்களை ராகு-கேது பெயர்ச்சிப் பலன் களுடன் ஒப்பிட்டு இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ராகு-கேதுக்களால் பாதிப்புகள் இருந்தால் குரு பார்வை அவர்கள் ராசியில் கிடைக்குமேயானால் நற்பலன் கிடைக்கும்.

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய ராசிகள்!

ஜென்ம கேது இடம்பெறும் மகர ராசி, ஜென்ம ராகு இடம்பெறும் கடக ராசி, அர்த்தாஷ்டம ராகு இடம்பெறும் மேஷ ராசி, அஷ்டமத்தில் ராகு அடியெடுத்து வைக்கும் தனுசு ராசி ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

யோகம் தரும் ராகுவையும், கீர்த்தி தரும் கேதுவையும், இது இடம்பெறாத மற்ற ராசிக்காரர்களும் முறையாக வழிபட்டால் யோகபலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும். நாள் பார்த்து வழிபட்டால் கோள்கள் கூட நற்பலன்களை வழங்கும்.

நற்பலன் பெறும் ராசிகள்!

மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களை வழங்கப் போகின்றது. இவர்களுக்கு பொருள் வரவு கூடும். புகழ் வந்து குவியும். பொன்னான வாய்ப்புகள் கண்ணெதிரில் நிற்கும். ஆனந்தமான வாழ்வமைய அடித்தளம் அமைத்துக் கொள்வார்கள். ராகு-கேதுக்களுக்கு உரிய பிரீதிகளைச் செய்வதன் மூலம் இவர்கள் மேலும் நற்லன்களைப் பெற இயலும்.

வழிபாட்டு தலங்கள்!

பொதுவாக தமிழகத்தில் நாக தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. சர்ப்ப விநாயகர் கோவில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், நைனார் கோவில், ஆதிசேஷன் பூஜை செய்த ஸ்தலமான பேரையூர், சங்கரன்கோவில், திருவெற்றியூர், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற இடங்களில் எல்லாம் ஆலயங்கள் இருக்கின்றன.

ராகுவிற்குரிய தெய்வமாக விளங்கும் துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். பட்டீஸ்வரம் துர்க்கை, கதிராமங்கலம் வனதுர்க்கை, மஹிஷாசுரமர்த்தினி அவதாரமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம் பி.அளகாபுரி ஸ்ரீபொன்னழகியம்மன் ஆலயம், மற்றும் வராஹி அம்மன் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். வாய்ப்பிருக்கும் பொழுது இந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News