ஆன்மிகம்

செங்குன்றம் அருகே வைகுண்டசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-07-20 05:50 GMT   |   Update On 2017-07-20 05:50 GMT
சென்னை செங்குன்றத்தை அடுத்த இடைப்பாளையம் அய்யா வைகுண்ட சுவாமி அலங்காரபதியில் 3 நாட்கள் ஆடித் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் தொடங்குகிறது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த இடைப்பாளையம் அய்யா வைகுண்ட சுவாமி அலங்காரபதியில் 3 நாட்கள் ஆடித் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் தொடங்குகிறது. 3-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, செங்குன்றம் காந்திநகர் விவேகானந்தா பள்ளிக்கூட மைதானத்தில் இருந்து வைகுண்ட சுவாமியின் கருட வாகன பவனி புறப்பட்டு கோவிலை வந்து அடையும். ஊர்வலத்தில் பெண்கள் ‘சுருள்’ எடுத்து வருவார்கள். நள்ளிரவில் கோவிலில் ‘வத்தல் பால்’ அருந்தும் நிகழ்ச்சி நடக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘திருஏடு வாசிப்பு’ நடந்து வருகிறது. விழாவையொட்டி 3 நாட்களும் வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும் நடைபெறும்.
Tags:    

Similar News