ஆன்மிகம்

இஸ்கான் சார்பில் சேலத்தில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நிகழ்ச்சி

Published On 2017-06-26 03:11 GMT   |   Update On 2017-06-26 03:11 GMT
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜகன்நாதரின் ரத யாத்திரை நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் அருகே கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவில் சார்பில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று சேலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் அம்மாபேட்டை பட்டைக்கோவிலில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்த ரத யாத்திரை தொடங்கியது.

பின்னர், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஜகன்நாதரின் உருவச்சிலை வைத்து பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து சென்றனர். இதையடுத்து ரத யாத்திரை சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, 5 ரோடு வழியாக ஜங்ஷன் மெயின்ரோட்டில் உள்ள சோனா கல்லூரியில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, ஹரே கிருஷ்ணா..! ஹரே கிருஷ்ணா..! ஹரே ராமா..! ஹரே ராமா..! என பாட்டு பாடிக்கொண்டு ஆடியவாறு சென்றனர். அதைத்தொடர்ந்து சோனா கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பஜனையும், இரவு 7 மணிக்கு ஜகன்நாதர் லீலை என்ற என்ற நிகழ்ச்சியும், 8 மணிக்கு அஜாமிளன் என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது. பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பூர் இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News