ஆன்மிகம்

பைரவர் தோன்றிய வரலாறு

Published On 2017-04-30 04:48 GMT   |   Update On 2017-04-30 04:48 GMT
அந்தகாசுரன் என்ற அசுரனிடம் இருந்து தேவர்களை காக்கும் பொருட்டு எம்பெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார்.
அந்தகாசுரன் என்ற அசுரன், ஈசனை நினைத்து கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக, சிவபெருமானிடம் இருந்து மூவுலகையும் ஆட்சி செய்யும் வரம் பெற்றான். வரம் பெற்றதும் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் அவதியுற்ற தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.



தேவர்களின் மீது கருணை கூர்ந்த எம்பெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடமிருந்து அஷ்டபைரவர்களும், 64 குட்டி பைரவர்களும் தோன்றி அந்தகாசுரனை அழித்தனர். அந்தகன் உயிர் பிரியும்போது பசியால் துடித்தான். உடனே பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து அவனுக்கு உணவாக கொடுத்தார்.

அப்போது அவன், பைரவரிடம், ‘எந்த பூஜை, நற்செயல்கள் நடந்தாலும் எனக்கும் மரியாதை செய்யப்படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். அதன்படியே இன்றும் விழாக்களின் போது அந்தகாசுரனை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது.

இதேபோல அந்தகாசுரனை அழித்தபோது பெருகிய ரத்தத்தை பருக பைரவர் ஒரு பூதத்தை தோற்றுவித்தார். அதனை பருகிய பூதம், ‘தனக்கும் உலகில் மரியாதை வேண்டும்’ என கேட்க பைரவரும் அவ்வாறே அருளினார். அப்பூதமே ‘வாஸ்துபுருஷன்’ ஆவார்.
Tags:    

Similar News