ஆன்மிகம்
அருணஜடேசுவரர் கோவில் புதிய ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

அருணஜடேசுவரர் கோவில் புதிய ரதம் வெள்ளோட்டம்

Published On 2017-04-24 05:16 GMT   |   Update On 2017-04-24 05:16 GMT
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோவில் புதிய ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அருணஜடேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து சாமியும், அம்மனும் ரதத்தில் வீதி உலா வருவதும் வழக்கம்.

ரதம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக ரதம் இல்லாமல் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரூ.25 லட்சம் செலவில் புதிய ரதம் செய்யப்பட்டது. புதிய ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் புதிய ரத வெள்ளோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Similar News