ஆன்மிகம்

கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

Published On 2017-04-23 04:45 GMT   |   Update On 2017-04-23 04:45 GMT
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக் கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக் கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்று கூறப்படுகிறது.

இசைத்துறையில் பரிமளிக்க விரும்புபவர்கள், இத்தல முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அத்துறையில் உயர்ந்த இடத்தை அடைவீர். அதுமட்டுமின்றி இத்தல இறைவனை வழிபட்டால் தீராத நோய்கள் தீர்வதுடன், பொருளாதார நிலையும் உயரும் என்கிறார்கள்.


இரவில் வழிபாடு :

பரமக்குடிக்கு அருகில் உள்ள கொடுமலூரில் போர்க்கோல அமைப்பில் உள்ள முருகப்பெருமானை தரிசிக்கலாம். இந்த முருகப்பெருமானுக்கு, அடுப்பில் சமைத்த உணவுகளின் நைவேத்தியம் இல்லை. எனவே இந்த ஆலயம், மடப்பள்ளி இல்லாத ஆலயமாக விளங்குகிறது.

மேலும் இங்கு விநாயகர் மற்றும் வேறு எந்த பரிவார தெய்வங்களும் இல்லை என்பதும் வியப்புக்குரிய விஷயமாகும். இது தவிர இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு இரவில் மட்டுமே பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பகை விலகும். மணவாழ்க்கை தித்திக்கும் என்பது நம்பிக்கை.

Similar News