ஆன்மிகம்

திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தினவிழா

Published On 2017-04-21 06:55 GMT   |   Update On 2017-04-21 06:55 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1000-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை மற்றும் வேத பாராயண அருள்செயல் கோஷ்டி சேவித்தலும் நடைபெற்றது.

பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜபெருமாள் தங்க கருடசேவையும், ராமானுஜர் சேஷவாகனத்தில் எதிர்சேவையும் மற்றும் வேத பாராயண கோஷ்டியுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதில் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் சாமிகள், சோளசிம்ஹபுரம் கோவில் கந்தாடை சண்டமாருதம் குமார தொட்டையாசாரிய சுவாமிகள், ஸ்ரீ வில்லிப்புத்தூர் பரமஹம்சசேத்யாதி 24-வது பட்டம், சடகோப ராமானுஜாச்சாரியார் ஜீயர் சுவாமிகள், ராஜமன்னார்குடி பரமஹம்சசேத்யாதி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தக்கார் கோவிந்தசாமி, தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Similar News