ஆன்மிகம்

நண்டு வழிபட்ட திருந்துதேவன்குடி

Published On 2017-04-19 07:31 GMT   |   Update On 2017-04-19 07:31 GMT
நமது ராசிக்குரிய சின்னங்கள் வழிபட்ட திருத்தலங்கள் இருந்தால் அவற்றைத் தேர்ந்தெடுத்து நாம் வழிபட்டால் நற்பலன்களைப் பெற அது வழிவகுக்கும்.
உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் உள்ளன. அவற்றுள் மனிதன் மட்டுமல்லாமல் பாம்பு, நண்டு, ஆமை, யானை, எறும்பு, ஆடு, ஈ, பசு என்று எல்லா ஜீவ ராசிகளும் இறைவனை வழிபட்டு முக்தி பெற்றுள்ளன.

இதனை புராணங்களும், ஆலய தல புராணங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதில் நமது ராசிக்குரிய சின்னங்கள் வழிபட்ட திருத்தலங்கள் இருந்தால் அவற்றைத் தேர்ந்தெடுத்து நாம் வழிபட்டால் நற்பலன்களைப் பெற அது வழிவகுக்கும்.

அந்த அடிப்படையில் கடக ராசிக்குரிய சின்னம் நண்டு. அந்த நண்டு பூஜித்து வழிபட்ட தலம் நண்டான் கோவில் என்று அழைக்கப்படும் கற்கடகேஸ்வரவர் ஆலயம். இதற்கு திருந்துதேவன்குடி என்ற பெயரும் உண்டு. கடக ராசிக்காரர்களின் சின்னமாகிய நண்டு பூஜித்த தலத்தில் யோகபலம் பெற்ற நாளில், அந்த ராசிக்காரர்கள் சென்று வழிபட்டால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். பதவி அனுகூலம் கிடைக்கும்.

இறைவன் கடகேஸ்வரர்- இறைவி அபூர்வ நாயகி (அருமந்தம்மை)

மூலவர் சுயம்பு லிங்கம். லிங்கத்தின் உச்சியில் நண்டு துளையிட்ட இடம் உள்ளது.

இது போன்று அவரவர் ராசிக்குரிய சிறப்பான தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் வளர்ச்சி மீது வளர்ச்சி வந்து சேரும்.

Similar News