ஆன்மிகம்

இர்வாடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவுர்ணமி பூஜை இன்று நடக்கிறது

Published On 2017-04-10 07:49 GMT   |   Update On 2017-04-10 07:49 GMT
இர்வாடியில் உள்ள கலியுக மங்கள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று(திங்கட்கிழமை) சுவாமி ஸ்ரீனிவாசராமானுஜர் தலைமையில் அசுவ பூஜை, கோபூஜை, குத்துவிளக்கு பூஜை, சுதர்சன மகாயாகம் ஆகியவை நடக்கிறது.
நவிமும்பை பன்வெல் இர்வாடியில் உள்ள கலியுக மங்கள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று(திங்கட்கிழமை) சுவாமி ஸ்ரீனிவாசராமானுஜர் தலைமையில் அசுவ பூஜை, கோபூஜை, குத்துவிளக்கு பூஜை, சுதர்சன மகாயாகம் ஆகியவை நடக்கிறது. ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

மேலும் பவுர்ணமி ஆரத்தி, சந்திரமகா தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன. திருமஞ்சன புண்ணிய தீர்த்தம் பக்தர்களின் மீது தெளிக்கப்படும். குழந்தை பாக்கியம், புத்திரதோஷம் மற்றும் திருமண தடை, களத்திர தோஷம் நீங்கவேண்டி விஷேச சங்கல்பம் செய்விக்கப்படுகிறது.

குத்து விளக்கு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கோவிலில் பெண்களுக்கு கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. முடிவில் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறார். இந்த தகவலை சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

Similar News