ஆன்மிகம்

திருவானைக்காவல் கோவிலுக்கு சேஷ வாகனம் பக்தர் வழங்கினார்

Published On 2017-03-30 04:49 GMT   |   Update On 2017-03-30 04:49 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் இலுப்பை மரத்தால் வடிவமைக்கப்பட்ட சேஷவாகனத்தை காணிக்கையாக வழங்கினார்.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் இலுப்பை மரத்தால் வடிவமைக்கப்பட்ட சேஷவாகனத்தை காணிக்கையாக வழங்கினார்.

7 அடி உயரமும், 5அடி அகலமும் கொண்ட இந்த சேஷவாகனம் ஆமை வடிவத்தில் பீடம் அமைக்கப்பட்டு 8 யானை, 8 பாம்புகள் தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாபநாசத்தில் உருவாக்கப்பட்ட இந்த சேஷவாகனத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியாவிடம் அந்த பக்தர் வழங்கினார்.

Similar News