ஆன்மிகம்

பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-03-29 09:25 GMT   |   Update On 2017-03-29 09:25 GMT
செங்குன்றம் பாடிய நல்லூர் பர்மாநகரில் உள்ள முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருகோயிலில் தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
செங்குன்றம் பாடிய நல்லூர் பர்மாநகரில் உள்ள முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருகோயிலில் 52-ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா நாளை (வியாழன்) தொடங்குகிறது.

காலை கணபதி ஹோமத் துடன் 2ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து காப்பு கட்டல் மற்றும் கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்குகிறது.

12 நாட்கள் அம்மன் வீதி உலா கிராம பிரதஷ்னம் சிறப்பு தீப ஆராதனை 12 நாட்களுக்கு பகல் இரவு அன்னதானம் கலை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகள் ஆகியவை நடைபெறுகின்றன.

9-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதிக்கிறார்கள். அன்று சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்படுகிறது.

கோவில் தலைவர் எஸ்.மனோகரன், செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொரு ளாளர் எம்.மாணிக்கம் ஆலய அறங்காவல் குழுத் தலைவரும் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவருமான பி.கார்மேகம் மற்றும் ஆலய அறங்காவலர்கள் ஆலய அன்னதான குழு நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Similar News