ஆன்மிகம்

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்

Published On 2017-03-25 05:02 GMT   |   Update On 2017-03-25 05:02 GMT
வாழப்பாடி அருகே பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ரூ.1½ கோடி செலவில் செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
வாழப்பாடி அருகே பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ரூ.1½ கோடி செலவில் கடந்த ஆண்டு தங்கத்தேர் அமைக்கப்பட்டது. 3 கிலோ தங்கத்தில் நவீன எலக்ட்ரோ பிளாஸ்ட் முறையில் தங்க முலாம் பூசப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் தேர் ஒப்படைக்கப்பட்டது.

கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தங்கத்தேரை வெள்ளோட்டம் நடத்திட வேண்டுமென பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 5 மாதங்களாக கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத்தேர் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கட்டணம் செலுத்தி, நேர்த்திக்கடனுக்காக இழுப்பதற்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News