ஆன்மிகம்

தர்பாரண்யேஸ்வர சாமி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

Published On 2017-03-25 04:56 GMT   |   Update On 2017-03-25 04:56 GMT
தர்பாரண்யேஸ்வர சாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திராட நட்சத்திர தினத்தன்று கும்பாபிஷேக ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வர சாமி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திராட நட்சத்திர தினத்தன்று கும்பாபிஷேக ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கும்பாபிஷேக ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து பிரகார வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து கலசங்களில் இருந்த புனிதநீரைக் கொண்டு அனைத்து சன்னதிகளிலும் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News