ஆன்மிகம்

மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2017-03-21 07:43 GMT   |   Update On 2017-03-21 07:43 GMT
முசிறி அருகே பொன்னாங்கன்னிப்பட்டி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர்.
முசிறி அருகே பொன்னாங்கன்னிப்பட்டி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனைத்திரவியங்கள் மூலம் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர்.

மேலும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவில் பொன்னாங்கன்னிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News