ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலின் அமைப்பு

Published On 2017-03-17 09:51 GMT   |   Update On 2017-03-17 09:51 GMT
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக்கோவிலும் உள்ளன.



அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.

கோவிலின் நுழைவுவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.

Similar News