ஆன்மிகம்

ஜலகண்டேஸ்வரர் கோவில் பெருவிழா

Published On 2017-03-17 04:16 GMT   |   Update On 2017-03-17 04:16 GMT
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் விழாவை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் சாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 16-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த நாளை ஆண்டு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் சாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

அதைத் தொடர்ந்து மாலையில் சத்துவாச்சாரியில் இருந்து ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவமூர்த்திகள் நந்தி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் இரவு கோவிலை அடைந்தது. அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News