ஆன்மிகம்

கண்ணமங்கலம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா

Published On 2017-02-27 03:01 GMT   |   Update On 2017-02-27 03:01 GMT
கண்ணமங்கலம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டி கொடியேற்று விழா நடந்தது. 24-ந் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கரக ஊர்வலம் நடந்தது. இரவு 10 மணியளவில் சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது. நேற்று அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அம்மன் தேரை பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி இழுத்து சென்றனர். மேலும் பக்தர்கள் சிலர் காளி, பிடாரன், பிடாரி வேடமணிந்தும், பெண்கள் சிலர் தீச்சட்டி ஏந்தியபடியும் சென்றனர்.

அம்மன் தேர் நாகநதிக்கரைக்கு சென்றதும் அங்கு மயான கொள்ளை உற்சவ திருவிழா நடந்தது. அப்போது பக்தர்கள் தானியங்களை மயான சூறையிட்டனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதி உலாவும் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்ணமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல அம்மன் தொண்டர்கள் செய்திருந்தனர்.

Similar News