ஆன்மிகம்
தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி நேற்று நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி

Published On 2017-02-11 05:01 GMT   |   Update On 2017-02-11 05:01 GMT
தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நேற்று சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடந்தது.
நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான கடந்த 3-ந்தேதி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் நடந்தது. இரவில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு நெல்லையப்பர் கோவில் சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடந்தது. நடராஜரை சப்பரத்தில் வைத்து தூக்கி வந்த பக்தர்கள் மேளதாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடினார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, நடராஜ தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளித்தெப்பகுளத்தில் தெப்ப திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் தெப்பக்குளத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் தெப்ப திருவிழா நடைபெறாது. ஆனால் அதற்கு பதிலாக சுவாமி-அம்பாளுடன் தெப்பத்திற்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

Similar News