ஆன்மிகம்
ஏழுமலையான் வனப்பகுதியில் பார்வேட்டைக்கு சென்ற காட்சி.

திருப்பதியில் பார்வேட்டைக்கு சென்ற ஏழுமலையான்

Published On 2017-01-16 08:39 GMT   |   Update On 2017-01-16 08:39 GMT
மாட்டு பொங்கல் தினமான நேற்று திருப்பதி மலையில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சாமி சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார்.
மாட்டு பொங்கல் தினம் அன்று ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று திருப்பதி மலையில் பார்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது.

உற்சவத்திற்காக திருப்பதியில் உள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு அணிவிக்கபட்ட மலர் மாலைகள் திருமலைக்கு எடுத்து செல்லபட்டன.

அந்த மாலைகளை அணிந்து மலையப்பசாமி கிருஷ்னர் அலங்காரத்தில் கதை, கத்தி, சங்கு, சக்கரம், வில், அம்பு ஆகியவற்றை ஏந்தி பல்லக்கில் ஏழுந்தருளி கோவிலில் இருந்து புறபட்டு பாபவிநாசம் சாலையில் இருக்கும் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்ட நிலையில் பார்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. அப்போது உற்சவர் சார்பில் கோவில் அர்ச்சகர் தயாராக வைக்கப்பட்டிருந்த பொம்மை மானை நோக்கி மூன்று முறை தங்க வேல் ஒன்றை வீசினார். அத்துடன் பார்வேட்டை உற்சவம் நிறைவடைந்த நிலையில் ஏழுமலையான் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக கோவிலை அடைந்தார்.

Similar News