ஆன்மிகம்

‘சனியனே’ என்று திட்டினால் என்ன நடக்கும்?

Published On 2016-12-26 10:14 GMT   |   Update On 2016-12-26 10:24 GMT
சனியனே என திட்டினால் யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியனே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்.

Similar News