ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 47 லட்சம்

Published On 2016-12-09 02:53 GMT   |   Update On 2016-12-09 02:53 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 47 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக மொத்தம் 9 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். அன்று காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 42 ஆயிரத்து 735 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கு 4 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 3 மணிநேரமும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 2 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 47 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து 40 சதவீத பக்தர்கள் வருவார்கள். சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், தமிழக பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது. மேலும் ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் சில்லரை தட்டுப்பாட்டாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News